
🔊To listen to this news in Tamil, Please select the text.
பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்களின் கல்வி கற்கும் நடைமுறை ஹைப்ரிட் முறைகளில் மாற்றப்பட்டால் (நேரடி காணொளி மூலம் கலந்த போதனை) மாணவர்கள் செலுத்த வேண்டிய கடனைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்கல்வி அமைச்சர் Khaled Nordin (காலிட் நோர்டின்) தெரிவித்தார்.
ஹைப்ரிட் கல்வி கற்கும் முறை கட்டாயம் இல்லையென்றாலும் அது ஒரு சில பாடங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
இந்நிலையில் ஹைப்ரிட் பாடத் திட்டம் பின்பற்றப்பட்டால் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் தாங்கள் விதிக்கும் கல்விக் கட்டணங்கள் 50 விழுக்காடு வரை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காலிட் நோர்டின் தெரிவித்தார்.
