
🔊To listen to this news in Tamil, Please select the text.
அண்மையில் ஊடகம் ஒன்று குழந்தைகளுக்கான பால் மாவின் விலை 10லிருந்து 30 ரிங்கிட் வரை அதிகரித்துள்ளதாகச் செய்தி வெளியிட்டது பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அது பற்றிக் குறிப்பிட்ட வாழ்க்கைச் செலவின அமைச்சர் Salahudin Ayub (சலாஹுடின் அயூப்), தமது ஆய்வில் அம்மாதிரியான விலை உயர்வு இருப்பதாகத் தெரியவில்லை என்றும் அது சம்பந்தமாக மேலும் ஆய்வுகள் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், பால் மாவு உற்பத்தியாளர்களுடன் சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு அது சம்பந்தமாக விரிவான பேச்சு வார்த்தை நடத்தப்படும். விலை ஏறியிருந்தால் அதனைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.



