
🔊To listen to this news in Tamil, Please select the text.
குறைவான மாணவர்களைக் கொண்டிருக்கும் தமிழ்ப் பள்ளிகளை, இந்தியர்கள் அதிகம் வாழும் இடங்களில் இடம்பெற்றம் செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும் என்று மனிதவள அமைச்சர் வி. சிவகுமார் தெரிவித்துள்ளார்.
தோட்டப்புறங்களில் குடியிருந்தவர்கள் நகர்ப்புறங்களில் குடியேறிவிட்டதால் தோட்டப்புற பள்ளிகளில் மாணவர்கள் குறைந்துவிட்டனர். இதனால், 15க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட தமிழ்ப் பள்ளிகளின் எதிர் காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காணும் வகையில், இந்தப் பள்ளிகளை நகர்புறங்களில் இந்தியர்கள் அதிகம் உள்ள பகுதிகளுக்கு இடமாற்றம் செய்வதற்கு முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் அதற்கு ஏதுவாக முதலில் நிலம் அடையாளம் காணப்படும் என்றும் சிவக்குமார் தெரிவித்தார்.
