27.5 C
Kuala Lumpur
Monday, August 10, 2026

Vetri

நேர்க்காணல் விவகாரத்தில் பேரா அரசின் பதில் என்ன?

🔥 Views : 39
👁 Reading Now : 24

பேரா பாரிட் புந்தார் டென்னிடவுன் வட்டாரத்தில் கட்டப்பட்டு வரும் மக்கள் வீடமைப்பு திட்டத்திற்கான நேர்காணலில் கலந்துக் கொள்ள தமக்கு எந்தவொரு அழைப்பும் ஏன் விடுக்கவில்லையென கேள்வியெழுப்பி இரண்டு மாதங்கள் ஆகும் வேளையில்,இதுவரையில் பேரா மாநில மக்கள் வீடமைப்பு மற்றும் சொத்துடமைy வாரியம் இதுவரையில் எந்தவொரு நியாயமான விளக்கத்தையும் தராதது மிகுந்த வருத்தமளிப்பதாக ஆ.சுப்பிரமணியம் கூறினார்.
இது சம்பந்தமாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பெங்குலு ஆகியோரை சந்தித்தும் எந்த பலனும் இல்லை.
இந்த வீடமைப்பு திட்டத்தில் வீட்டை வாங்குவதற்கு அனைத்து தகுதிகள் இருந்தும்,ஏன் இந்த பாரபட்சம் காட்டப்படுகிறது என்பது புரியவில்லை.
ஆகையால் இவ்விவகாரத்தில் பேரா மாநில அரசாங்கம் தலையிட்டு நல்லதொரு தீர்வை தர வேண்டும்.
இல்லையென்றால் இப்பிரச்சனையை சம்பந்தப்பட்ட அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்வேன் என வேன் ஓட்டுனரான ஆ.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles