27.6 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

இந்தியர்கள் மரணத்திற்கு அரசு ஆணையே தீர்வு

🔥 Views : 11
👁 Reading Now : 22

 
கிள்ளான் போலீஸ் தடுப்பு காவலில்    இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உமார் பாருக் அப்துல்லா என்ற  இன்னுமொருவரின் அதிர்ச்சி மரணம் என்ற செய்தி நம்மை அதிர வைக்கிறது என்று ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரன் தெரிவித்தார்.
வெறும் 50 நாட்களில் காவல் துறை கண்காணிப்பில் 4மரணங்களா?
இதற்கு முன்பும் அதிகமான இந்தியர்கள் காவல் துறையின் கண்காணிப்பில் இருக்கும் போதே இறந்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது .
இதனை தட்டிக் கேட்க பெரிக்காதான் அரசிடம் இந்திய பிரதிநிதிகள் யாரும் இல்லையா?
மலேசிய நாட்டில் உள்ள காவல் நிலையங்களில் எப்பொழுது இந்த மரண ஓலங்கள் ஓயப்போகின்றன ?
இதற்கு காவல் துறை தலைமை ஆணையர்  எப்பொழுது பதிலளிக்கப் போகிறார் ?
புதிய போலீஸ் ஆணையர் பதவி ஏற்றவுடன் போலீஸ் கண்காணிப்பில் இனிமேல் மரணம் என்பது பூஜியம் என்ற இலக்கில்தான்  இருக்க வேண்டுமென்று கூறினார்.
ஆனால் நடப்பதோ நேர்மாறாக இருக்கிறது.

காவல் துறையும் மற்ற அரசு கேந்திரங்களும் இந்த காவல் துறை மரணங்கள் தொடர்பில் முழு விசாரணை நடத்த வேண்டும் என உள்துறை அமைச்சு    விடுத்திருக்கும்  அறைகூவலுக்கு நான் பாராட்டு தெரிவிக்கிறேன் . 
அதே வேளையில் இது முழுமையாக வெளிப்படைதன்மையுடன் நடத்தப்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles