

தடுப்புக்காவலில் ஹேமாநாதன் என்ற இளைஞர் மரணமடைந்த சம்பவம் தொடர்பில் மறைந்திருக்கும் உண்மைகள் வெளிச்சத்துக்கு வர வேண்டுமென அவரின் குடும்பத்தின் சார்பில் வாதாடும் பிரபல வழக்கறிஞர் மனோகரன் மலையாளம் தெரிவித்தார்.
மாடியிலிருந்து கீழே குதித்ததால் ஹேமநாதன் மரணமுற்றார் என்று போலீசார் கூறுவதை நம்ப முடியவில்லை.
கைவிலங்கு போடப்பட்ட நிலையில் அவர் எப்படி மாடியில் இருந்து ஜன்னல் வழியாக கீழே குதித்தார்.
அப்படி குதிப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
கேஸ் சிலிண்டர் திருடியதாக கைது செய்யப்பட்ட இவரை எதற்காக நான்கு நாட்கள் தடுத்து வைக்கப்பட வேண்டும். இவர் இரண்டு நாட்களாக சாப்பிடவில்லை என்று போலீஸார் கூறுகிறார்கள்.
அப்படி என்றால் அவர் கிழே குதிப்பதற்கு எங்கிருந்து சத்து வந்தது என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இவரின்
மரணத்தில் போலீசார் கூறும் காரணங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இவரின் மரணத்திற்கு நீதி கிடைக்க வழக்கு தொடுக்கப்படும் என்று வழக்கறிஞர் மனோகரன் மலையாளம் தெரிவித்தார்.
ஆறு மாதக் கைக்குழந்தை மற்றும் 4, 5 வயதில் மூன்று பிள்ளைகளும்
தந்தையை இழந்துள்ளனர். கணவரை இழந்த துயரத்தில்அவரின் மனைவி கண்ணகி வேதனையுடன் இருக்கிறார்.
காவல் கைதிகள் மரணமடையும் சம்பவம் ஒரு தொடர்கதையாக இருக்கிறது .
கடந்த 45 நாட்களில் காவல் கைதி கணபதி, சிவபாலன் மற்றும் சுரேந்திரன் ஆகியோர் மரணம் அடைந்தனர் இப்போது இந்த வரிசையில் ஹேமநாதன் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக அவர் சொன்னார்.
