
🔊To listen to this news in Tamil, Please select the text.
ஆறு மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறலாம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கோடி காட்டினார்.
தேர்தலுக்கு வழிவிடும் வகையில் ஆறு மாநிலங்களின் சட்டமன்றங்கள் கலைக்கப்பட்டு வருகின்றன.
தேர்தல் ஆணைய சட்டத்தின்படி, சட்டமன்றம் கலைக்கப்பட்ட 60 நாட்களில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன் அடிப்படையில் வரும் ஆகஸ்ட் மாதம் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெறலாம்.
அந்த வகையில் நம்பிக்கை கூட்டணியின் நல்லாட்சி நெகிரி செம்பிலான் மாநிலத்திலும் தொடர இந்த மாநிலத்தில் வாழும் இந்திய மக்கள் நம்பிக்கை கூட்டணிக்கும் ஒற்றுமை அரசாங்கத்திற்கும் முழு ஆதரவு தர வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.



