
🔊To listen to this news in Tamil, Please select the text.
பக்காத்தானுக்கும் தேசிய முன்னணிக்கும் இடையே ஏற்பட்டிருந்த மோதல்களை மறந்து விட்டு வரும் தேர்தலில் ஒற்றுமை அரசாங்கம் சிலாங்கூரை மீண்டும் கைப்பற்ற ஒத்துழைக்க வேண்டுமென மாநில பக்காத்தான் தலைவரும் பராமரிப்பு அரசின் மந்திரி பெசாருமான டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அறைகூவல் விடுத்தார்.
நேற்று மாநில தேர்தல் இயந்திர அறிமுக விழாவில் உரையாற்றிய அவர், பெரிக்காத்தான் ஆட்சியில் சீரழிந்து போன ஆட்சியை நேர் பாதைக்குத் திருப்பவே ஒற்றுமை அரசு பாடுபடுவதாகக் குறிப்பிட்டார்.
நாட்டில் இன, சமய விரோதத்தை உருவாக்கி கலவரத்தை கேற்படுத்தி, கோலோச்ச திட்டமிடும் இனவாத கட்சிகளைத் தூக்கி எறிய பக்காத்தான் மற்றும் தேசிய முன்னணி தலைவர்களும் மக்களும் கடுமையாகப் பாடுபட வேண்டுமென அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டார்.



