
🔊To listen to this news in Tamil, Please select the text.
கோலாலம்பூர் மாநகரின் மையத்தில் வீற்றிருக்கும் ஜாலான் பண்டார் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் 7 ஆவது கும்பாபிஷேகம் நேற்று மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. 1,873ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இவ்வாலயம் மலேசியாவின் தாய் கோயிலாக கருதப்படுகிறது. தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ நடராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ம.இகாவின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ SA விக்னேஸ்வரன் , துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் , செனட்டர் டத்தோஸ்ரீ எஸ் ,வேள்பாரி , கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர்
வீ. கணபதி ராவ் , இந்தியத் தூதர் பி.என் ரெட்டி உட்பட 10,000 த்திற்கும் மேற்பட்ட பக்தர்களும் திரளாக கலந்துகொண்டனர்.
நேற்று காலை மணி 11.15 க்கு விநாயகர் சன்னதியின் கும்பத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டதை தொடர்ந்து ஸ்ரீ மகா மாரியம்மனின் தங்க விமானத்திற்கும், ராஜ கோபுரத்திற்கும் புனித நீர் ஊற்றப்பட்டது. அவ்வேளையில் வானில் ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்தோடு , பக்தர்ளுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டது.
பக்தர்கள் வழங்கிய ஆதரவும் இந்த கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெறுவதற்கு காரணமாக இருந்ததாக டான்ஸ்ரீ நடராஜா கூறினார்.
இதனிடையே நேற்றைய கும்பாபிஷேக நிகழ்வில் பக்தர்களும் தங்களது மகிழ்ச்சியை வணக்கம் மலேசியாவிடம் பகிர்ந்து கொண்டனர்.
மலேசியாவின் தாய் கோயில் என்னும் சிறப்புக் கொண்ட கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் ஆசி தங்களுக்கு கிட்டும் எனும் எதிர்ப்பார்ப்பை பக்தர்கள் வெளிப்படுத்தினர்.
