31.2 C
Kuala Lumpur
Thursday, July 2, 2026

Vetri

பக்காத்தான் ஹராப்பான் – தேசிய முன்னணி தொகுதி பங்கீடு ஹஜ்ஜூப் பெருநாளுக்கு பின் முடிவு காணப்படும்

🔥 Views : 18
👁 Reading Now : 52

🔊To listen to this news in Tamil, Please select the text.

சிலாங்கூரில் பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பெரிக்காத்தான் நேசனலுக்கிடையே தொகுதி பங்கீடுகளில் இணக்கம் காண்பதில் இன்னும் இரண்டொரு தொதிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. ஹஜ்ஜூப் பெருநாளுக்குப் பிறகு தொகுதி பங்கீடு விவகாரத்திற்கு முழுமையாக தீர்வு காணப்பட்டு விடும் என சிலாங்கூர் மந்திரிபுசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி ( Amirudin Shari ) தெரிவித்தார். வெற்றிபெறக்கூடிய வாய்ப்பைக் கொண்ட வேட்பாளர்கள் என்ற அடிப்படையில்தான் வேட்பாளர்கள் தேர்வு இருப்பதாக அவர் கூறினார். 15ஆண்டு காலமாக சிலாங்கூரில் சிறந்த நல்லாட்சியை வழங்கியிருக்கிறோம் .
அந்த அடிப்படையில் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணிக்கு மக்கள் ஆதரவு தொடர்ந்து கிடைக்கும் என அமிருடின் நம்பிக்கை தெரிவித்தார். இப்போது தேசிய முன்னணியிலும் எங்களுக்கு நண்பர்கள் இருப்பதால் நிர்வாகத்தில் மேலும் அனுபவசாலிகளை கொண்டிருக்கும் வாய்ப்பு இருப்பதையும் அவர் சுட்டிககக்காட்டினர். நிலைத்தன்மை மற்றும் பொருளாதார சுபிட்சத்தை பக்காத்தான் ஹராப்பான் – தேசிய முன்னணி கூட்டணி உறுதிப்படுத்த முடியும் என அமிருடின் ஷாரி விவரித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles