31.2 C
Kuala Lumpur
Thursday, July 2, 2026

Vetri

மஇகா-விலிருந்து வெளியேறுவதாக செனட்டர் சிவராஜ் அறிவிப்பு

🔥 Views : 11
👁 Reading Now : 62

🔊To listen to this news in Tamil, Please select the text.

மஇகாவிலிருந்து வெளியேறுவதாக அக்கட்சியின் முன்னாள் உதவித் தலைவர் செனட்டர் சிவராஜ் அறிவித்துள்ளார். அதே சமயத்தில் பூச்சோங், தாமான் புக்கிட் குச்சாய் பாரு மஇகா கிளை தலைவர் பதவியிலிருந்தும் அவர் விலகியுள்ளார் . அவரது அந்த விலகல் ஜூன் 27-ஆம் தேதி தொடங்கி உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த முடிவு வருத்தம் அளித்த போதும், இந்திய சமுதாயத்தை பிரதிநிதிக்கும் தலைவர் என்ற முறையில், மேலவை உறுப்பினர் பொறுப்புகளை, எந்த தடையும் இன்றி குறிப்பாக மஇகா தலைமைத்துவத்தின் தலையீடு இன்றி நிறைவேற்ற அது மிகவும் அவசியம் என, கட்சி தலைவர் டான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரனுக்கு அனுப்பிய கடிதத்ததில் சிவராஜ் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, மஇகாவில் பல்வேறு நிலை பதவிகளை வகித்த அனுபவத்தை கொண்ட சிவராஜ், கட்சிக்கும் மக்களுக்கும் தம்மால் இயன்ற சிறந்த சேவையை வழங்க முடிந்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துக் கொண்டதோடு, நாட்டின் அரசியல் களத்தில், இந்திய சமூகத்தின் குரலாக மஇகா தொடர்ந்து ஒலிக்க தமது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles