25.3 C
Kuala Lumpur
Thursday, April 23, 2026

Vetri

சிறையில் இருக்கும் மகளை மீட்பதற்காக 3.5 மில்லியன் ரிங்கிட்டை இழந்த பாட்டி

🔊To listen to this news in Tamil, Please select the text.

சிறையில் இருக்கும் மகளை மீட்பதற்காக பாட்டி ஒருவர் 3.5 மில்லியன் வெள்ளியை இழந்துள்ளார்.

சொஸ்மா சட்டத்தில் கைது செய்யப்பட்ட 38 வயது மகள் கடந்த 2019ஆம் ஆண்டு காஜாங் சிறையில் அடைக்கப்பட்டார்.

மகளை காப்பாற்றும் நோக்கில் தொழிலதிபரான 67 வயது பாட்டி பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

குறிப்பாக கடந்த 2020 மார்ச் மாதத்தில் ஓர் ஆடவரின் தொடர்பு கிடைத்துள்ளது.

சிறையில் இருக்கும் மகளை என்னால் காப்பாற்ற முடியும். ஆனால் அதற்கு பணம் செலுத்த வேண்டும் என அவ்வாடவர் கூறியுள்ளார்.

இதனை நம்பிய அப்பாட்டி 3.5 மில்லியன் வெள்ளியை அவ்வாடரிடம் தந்துள்ளார். ஆனால், மகள் இன்னமும் சிறையில் தான் உள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை நடத்தி வருவதாக  ஜொகூர் போலீஸ்படையின் துணைத் தலைவர் எம். குமார் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles