26.4 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

பொது இடத்தில் ‘ஷார்ட்ஸ்’ அணிந்த முஸ்லீம் அல்லாத கிளந்தான் பெண்ணுக்கு அபராதம் ; இணையவாசிகள் சினம்

🔥 Views : 5
👁 Reading Now : 60

🔊To listen to this news in Tamil, Please select the text.

கிளந்தான், கோத்தா பாருவில், அநாகரீகமாக ஆடை அடைந்த பெண் ஒருவருக்கு, அபராத கடிதம் அனுப்பப்பட்டதை, MPKB – கோத்தா பாரு நகராண்மைக் கழகம் உறுதிப்படுத்தியுள்ளது.

நேற்று காலை மணி 11 வாக்கில், கோத்தா பாரு, ஜாலான் மெர்பாவில் அமைதுள்ள பேரங்காடி ஒன்றில், நகராண்மைக் கழகத்தின் அமலாக்க அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, ஆடைகளை வியாபாரம் செய்யும் அந்த 35 வயது பெண்ணுக்கு, அபராதம் விதிக்கப்பட்டது.

பொது இடத்தில், அநாகரிகமான முறையில், குட்டையான கால்சட்டையை அணிந்திருந்ததால், அப்பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக, கோத்தா பாரும் நகராண்மைக் கழகத்தின் தலைவர் ரோஸ்னாஸ்லி அமீன் தெரிவித்தார்.

ஏழு நாட்களுக்கு, சம்பந்தப்பட்ட பெண் அந்த அபராத்தை செலுத்த வேண்டும். இல்லையென்றால், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அந்த அபராத கடித்ததை, சம்பந்தப்பட்ட பெண்ணின் உறவினர் ஒருவர் நேற்று சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்ததை அடுத்து, அவ்விவகாரம் சர்ச்சையாகியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles