
🔊To listen to this news in Tamil, Please select the text.
ஜூன் 15ஆம் தேதி போலீஸ் கார்ப்பரலையும், ஒரு நபரையும் அதோடு பெண்ணொருவரையும் தகாத வார்த்தைகளால் அவமதித்து, அச்சுறுத்திய பெண் இன்ஸ்பெக்டரான Sheila Sharon Steven Kumar- 39) (ஷீலா ஷாரோன் ஸ்டீவன் குமார்) என்பவர் மீது செலாயாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
அன்றைய தினம் தாமான் ஸ்ரீகோம்பாக் உணவகம் ஒன்றில் போலீஸ் லான்ஸ் கார்ப்பரல் ஒருவரை அவமதித்து மாவட்ட அதிகாரி போல செயல்பட வேண்டாமென சாடியதோடு, அங்குள்ள கார் நிறுத்துமிடத்தில் வாகனமோட்டி ஒருவருடன் வாய்த் தகராறில் ஈடுப்பட்டதோடு பெண் ஒருவரை தகாத வார்த்தைகளால் ஏசி அச்சுறுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
முதல் குற்றத்தில் 3,000 ரிங்கிட் பிணையிலும் இரண்டாவது குற்றச்சாட்டில் 2,000 ரிங்கிட் பிணையிலும் அவரை மாஜிஸ்திரேட் சாய் குவான் ஹோக் விடுவித்தார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் முதலிரண்டு குற்றங்களுக்கு தலா 5 ஆண்டு சிறையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
2016இல் இருந்து போலீஸ் துறையில் பணியாற்றும் அவரின் தந்தையார் 30 ஆண்டுகளுக்கு மேல் போலீஸாராகப் பணியாற்றி ஓய்வு பெற்றிருப்பதாகவும் அவரது சகோதரர் அதே போலீஸ் துறையில் இன்னமும் பணியாற்றுவதாகத் தெரிகிறது.
மேலும், அவர் மீதான 6 குற்றச்சாட்டுகளுக்கு விசாரணைக் கோப்புகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
