26.4 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

தேர்தலில் டோனி புவா போட்டியிடமாட்டார்

🔥 Views : 9
👁 Reading Now : 68

🔊To listen to this news in Tamil, Please select the text.

ஜசெக டோனி புவாவை மாநிலத் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தாது என அதன் தலைமைச் செயலாளர் அந்தோணி லோக் சியூ ஃபூக் தெரிவித்தார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், தேர்தலில் போட்டியிட டோனி புவா ஆர்வம் காட்டவில்லை என்பதால் அவர் தேர்தலில் தவிர்க்கப்பட்டிருப்பதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.
அண்மையில் நன்கொடை திரட்டும் நிகழ்ச்சியில் பேசிய டோனி புவா, தேசிய முன்னணியானது ஊழல் மிகுந்த கட்சி என விமர்சித்தது பக்காத்தான் ஹாராப்பானுக்கு தர்ம சங்கடத்தை உருவாக்கியது.
பல அம்னோ தலைவர் அது பற்றிய கண்டனத்தைத் தெரிவித்து, ஒற்றுமை அரசாங்கத்தில் ஜசெக, அம்னோவுடன் ஒத்துழைக்க விரும்பாவிட்டால், ஆட்சியிலிருந்து விலகலாம் என சாடியிருந்தனர்.
இந்நிலையில், அவ்வாறு டோனி புவா கூறியிருப்பது அவரது சொந்தக் கருத்து என்றும் அது கட்சியின் கருத்தைப் பிரதிபலிக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles