31.8 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

மாநிலத் தேர்தல்களில் இளைஞர்கள் விவேகமாக முடிவெடுக்க வேண்டும்

🔥 Views : 6
👁 Reading Now : 28

🔊To listen to this news in Tamil, Please select the text.

6 மாநிலத் தேர்தல்களில் இளைஞர்கள் ஊடகச் செய்திகளில் வயப்படாமல் நாட்டின் நலனை முன்னிட்டு, சரியான முடிவை எடுக்க வேண்டுமென பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.
நாட்டின் தலைவிதியை நிர்ணயிப்பது இளைஞர்களின் கைகளில் இருப்பதால், தவறான முடிவை எடுத்து பின்னர், அதனால் துயரடையக் கூடாதென அவர் கேட்டுக் கொண்டார்.
நாட்டை ஊழலலின்றி வழிநடத்த எந்தக் கட்சியினால் முடியும் என்பதை தீர யோசித்து இளைஞர்கள் சிறந்த முடிவை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பாங்கி தேசிய பல்கலைக்கழகத்தில் ராக்கான் மூடா இளைஞர் திட்டத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றும்போது அவர், Tunai Belia Rahmah திட்டத்தின் வழி தகுதியான இளைஞர்களுக்கு 200 ரிங்கிட் நிதியுதவி ஜுன் 26ஆம் தேதி, திங்கட்கிழமை முதல் வழங்கப்படும் என அறிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles