
🔊To listen to this news in Tamil, Please select the text.
இளைய சமுதாயத்தை மையமாகக் கொண்ட மூடா கட்சி, வரும் சட்டமன்றத் தேர்தலில் தனியாக களம் இறங்க இருப்பதாகத் தெரிகிறது.
நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியில் இளைஞர் விளையாட்டுத் துறைக்கு 25 வயதில் அமைச்சரான சைட் சாடிக் சைட் அப்துல் ரகுமான், அந்த ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின்னர் பல்வேறு அரசியல் நிலைப்பாட்டிற்குப் பின், நிறைவாக தனிக் கட்சி அமைத்தார்.
நம்பிக்கைக் கூட்டணியில் சேர விரும்பிய அவரின் முயற்சியை நம்பிக்கைக் கூட்டணி பொருட்படுத்தாத நிலையில், வாக்குகளைப் பிரிக்கும் நோக்கில் வரும் 6 மாநில சட்டமன்றத் தேர்தலின்போது, தனித்துப் போட்டியிட திட்டமிடுவதாக மூடா வட்டாரத் தகவல் தெரிவிக்கிறது. முடிவு இன்றோ அல்லது கூடிய விரைவிலோத் தெரியவரும்.
