31.8 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

ங்கா கோர் மிங் வருகையால் வாகன ஓட்டியர் பெரும் அவதி:மன்னிப்பு கேட்டபின் பினாங்கில் அதிருப்தி தணிந்தது

🔥 Views : 7
👁 Reading Now : 41

🔊To listen to this news in Tamil, Please select the text.

பினாங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட அரசுசார் நிகழிச்சியில் கலந்து கொள்வதற்காக ஊராட்சி மேம்பாட்டுத் துறை அமைச்சர் ங்கா கோர் மிங் வருகை தந்தபோது, 30 வாகன நிறுத்துமிடங்கள் மூடப்பட்டதால் ஏராளமான வாகன ஓட்டுநர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

பினாங்கு ஊராட்சி மன்றங்களால் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுப் பணிகள் குறித்து நேரில் அறியவும் வட்டார உள்கட்டமைப்பை ஆய்வு செய்வதற்கும் கூடவே பொதுமக்களின் கருத்தை அறியவும் அமைச்சர் வருகை தந்தபோது, வாகன நிறுத்துமிடங்கள் ஒரே நேரத்தில் அடைக்கப்பட்டதால் திடீரென போக்குவரத்து சிக்கல் எழுந்தது.

இதன்தொடர்பில், வர்த்தக நிறுவனங்களிடமும் பொதுமக்களிடமும் அமைச்சர் வருத்தம் தெரிவித்தபின், பொதுமக்களிடம் பரவலாக ஏற்பட்டிருந்த அதிருப்தி அலை தற்பொழுது தணிந்துள்ளதாகத் தெரிகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles