
🔊To listen to this news in Tamil, Please select the text.
சுகாதாரத் துறையில் நீண்ட கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட இருக்கும் சீர்திருத்தங்கள் உட்பட பல அம்சங்களை உள்ளடக்கிய வெள்ளை அறிக்கையை, நாடாளுமன்ற மேலவை நேற்று அங்கீகரித்தது.
அடுத்த 15 ஆண்டுகளில் செயல்படுத்துவதற்கான சுகாதார கட்டமைப்பு, சீர்திருத்தங்களுக்கான உத்தி, சுகாதார மறுமலர்ச்சி போன்ற அம்சங்களை எல்லாம் உள்ளடக்கிய வெள்ளை அறிக்கையை சுகாதார அமைச்சர் டாக்டர் சலேஹா முஸ்தஃபா, ஜூன் 15-இல் வாசிப்பிற்காக சமர்ப்பித்த நிலையில், 27 செனட்டர்கள் இது குறித்து விவாதித்தனர்.
இதன் தொடர்பில் சுகாதார துணை அமைச்சர் Lukanisman Sauni நேற்று மேலவையில் பேசியபோது, மிகவும் மோசமாக உள்ள 400 சுகாதார கிளினிக்குகள் தேசிய அளவில் மறுசீரமைப்பு செய்யப்படுகின்றன என்றார்.



