31.2 C
Kuala Lumpur
Thursday, July 2, 2026

Vetri

மூடா இறுமாப்போடு செயல்படக் கூடாது

🔥 Views : 15
👁 Reading Now : 28

🔊To listen to this news in Tamil, Please select the text.

வரும் மாநிலத் தேர்தல்களில் தனித்துப் போட்டியிடும் என அறிவித்தது அதன் இறுமாப்பை வெளிப்படுத்துவதாக டான்ஸ்ரீ லிம் கிட் சியாம் விமர்சித்துள்ளார்.
பக்காத்தான் ஹராப்பான் அக்கட்சிக்குத் தொகுதிகளை வழங்க மறுத்ததன் காரணமாக அதன் தலைவர் Syed Saddiq Syed Abdul Rahman (சைட் சாடிக் அப்துல் ரஹ்மான்) வெகுண்டெழுந்து, வீராப்போடு தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்திருப்பது முதிர்ச்சியற்ற செயல்பாடு என கிட் சியாங் குறிப்பிட்டார்.
மூடா தொடங்கப்பட்டு இன்னும் வலுவான கட்சியாக இயங்கவில்லை என்பதால் தற்போதைக்கு அது பக்காத்தான் கொள்கைகளை ஆதரித்து மக்களின் மனதில் இடம் பிடிக்க வேண்டுமென்றும், அரசியலில் சாதுரியம் மட்டுமே வெற்றியை ஈட்டித் தரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
2020இல் தோற்றுவிக்கப்பட்ட மூடா, ஜொகூர் தேர்தலிலும் 15ஆவது பொதுத் தேர்தலிலும் பக்காத்தான் ஆதரவில் போட்டியிட்டது. தற்போது அதில் சைட் சாடிக் மூவார் எம்பியாகவும் அதன் துணைத் தலைவர் Amira Aisya Abd Aziz (அமிரா அயிஸியா அப்துல் அஸிஸ்) புத்ரி வங்சா சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles