32.8 C
Kuala Lumpur
Thursday, July 2, 2026

Vetri

ஐபிஎஃப்புக்கும் மக்கள் சக்திக்கும் தொகுதிகள் கிடைக்குமா?

🔥 Views : 12
👁 Reading Now : 23

🔊To listen to this news in Tamil, Please select the text.

தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் ஐபி எஃப்பும் மக்கள் சக்தியும் வரும் மாநிலத் தேர்தல்களில் போட்டியிட நான்கு தொகுதிளைக் கோரி மனு செய்துள்ளன.
சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு மற்றும் கெடாவில் மட்டுமே தாங்கள் போட்டியிடுவதாகவும் மாநில வாரியாக தலா ஓரிடம் மட்டுமே போதும் என ஐபிஎஃபின் தலைவர் டத்தோ டி. லோகநாதனும் மக்கள் சக்தி தலைவர் டத்தோ ஆர். தனேந்திரனும் கூறியுள்ளனர்.
ஒற்றுமை அரசாங்கத்தில் இருக்கும் அம்னோ போட்டியிட, அது கோரியுள்ள இடங்கள் கிடைக்குமா தெரியாத நிலையில், இந்தியர்களின் முக்கிய கட்சியாக விளங்கும் மஇகாவுக்கும் தொகுதிகள் கிடைப்பதில் சிக்கல் நீடிப்பதால் ஐபிஎஃபிற்கும் மக்கள் சக்திக்கும் தொகுதிகள் கிடைப்பது சந்தேகமே என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
கடந்த 15ஆவது பொதுத்தேர்தலில் லோகநாதன் பினாங்கு ஜெலுத்தோங் தொகுதியிலும் தனேந்திரன் நியோங் திபால் தொகுதியிலும் தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்டு தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles