29 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

பெற்றோரை கொலைசெய்ய முயலும்13 வயது சிறுமி

🔥 Views : 8
👁 Reading Now : 41

🔊To listen to this news in Tamil, Please select the text.

நாங்கள் குளிக்கச் செல்லும் நேரம் பார்த்து, குளியல் அறையில் எண்ணெய்யை ஊற்றுகிறாள்; காஃபி தயாரிக்கும் நேரத்தில் காஃபித் தூளுடன் மருந்தை கலந்து விடுகிறாள்; கொலை செய்வது எப்படி என்றும் கொடூரமான காட்சிகளையும் எப்பொழுது விவேக தொலைபேசியில் பார்த்துக் கொண்டே இருக்கிறாள்.

நாங்கள் என்ன சொன்னாலும் கேட்பதில்லை; சொல்லாமல் வெளியில் செல்வதையும் தாமதித்து இல்லம் திரும்புவதையும் வழக்கமாகக் கொண்டுள்ள இவளை நெருங்கவே எங்களுக்கு பயமாக இருக்கிறது. அதனால் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து எங்களின் நிலையை சரிபார்த்துக் கொள்ளுங்கள் என்று 56 வயதான தந்தை ஒருவர், போலீசாரிடம் கெஞ்சிய காட்சி உலகையே உலுக்கியுள்ளது.

நீண்ட காலமாக பிள்ளையில்லாமல் தவமிருந்து பெற்ற இந்த மகள் எங்களுக்குக் கிடைத்தபோது நாங்கள் அடைந்த இன்பத்திற்கு எல்லை இல்லை; இப்போது அதே மகளைக் கண்டு நான் மட்டுமல்ல; 46 வயதான மனைவியும் நடுங்குகிறாள்.

இரவெல்லாம் தொலைக்காட்சியைப் பார்த்துவிட்டு, அன்றாடம் மதியம் எழுந்திருக்கும் மகளைக் கண்டிப்பதால் எங்களைக் கொல்ல நினைக்கிறாள் என்று பதறும் பெற்றோர், காந்தி பிறந்த குஜராத் மண்ணைச் சேர்ந்த அகமதாபாத் நகரைச் சேர்ந்தவர்கள் என்று பிபிசி தகவல் வெளியிட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles