
🔊To listen to this news in Tamil, Please select the text.
நாட்டிலுள்ள தொழிலாளர்கள் தங்களது தொழில் திறனை வளர்த்துக் கொள்ளத் தவறினால் நாலரை லட்சம் பேர் 2030ஆம் ஆண்டு வாக்கில் தங்களது வேலையை இழப்பர் என மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் எச்சரித்தார்.
தற்போது உலகளவில் தொழில்துறைகளில் நவீன தொழில்நுட்பம் புகுத்தப்பட்டு தொழிற்சாலை பணிகள் விரைவாகவும், செலவு குறைந்தும், அதிக உற்பத்தியும் அதிகரித்து வருவதால் அதிகமான திறன்மிக்க தொழிலாளர்கள் தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இது பெரும்பாலும் உற்பத்தித் துறை, சுகாதாரச் சேவை, பயனீட்டாளர் சேவைத் துறைகளில் அதிகமான திறன்மிக்க தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர்.
4.0ஆவது தொழில் புரட்சி வியாபிக்கும் இந் நேரத்தில் தேசிய நிலையில் நமது மனிதவளத்தை திறன்மிக்கதாக உருவாக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
எனவே, தொழிலாளர்களின் திறனை உயர்த்த அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும் அது மெக்காட்ரொனிக், மின்சாரம் மற்றும் மின்னியல் தொழில்துறை, புள்ளிவிவர ஆய்வு, தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.



