
🔊To listen to this news in Tamil, Please select the text.
2018-ஆம் ஆண்டு நவம்பர் 25 ஹிண்ட்ராப் பேரணி நாளைத் தொடர்ந்து, சுபாங் ஜெயா சீ ஃபீல்ட் அருள்மிகு மாரியம்மன் ஆலய வளாகத்தில் திடீரென்று கலவரம் வெடித்தது.
இந்தக் கலவரத்தில் தொடர்புடைவர்கள் என 17 இந்தியர்கள்மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு நடைபெற்று வந்த நிலையில், சம்பந்தப்பட்ட 17 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
பெட்டாலிங் ஜெயா செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி இஸ்கந்தார் ஜைனோல், 17 பேர் மீதான குற்றம் சாட்டை அரசுத் தரப்பு நிரூபிக்கத் தவறியதால் சம்பந்தப்பட்ட அனைவரையும் விடுதலை செய்வதாக அறிவித்தார்.



