27.9 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

பேங்க் நெகாரா பணிநீக்கியதை எதிர்த்துகோகிலா தொடுத்த வழக்கு இன்று விசாரணை! -டத்தோ அம்பிகா வழக்காடுகிறார்

🔊To listen to this news in Tamil, Please select the text.

கோகிலா த/பெ ஞானசேகரன், 2013 பொதுத் தேர்தல் சமயத்தில் மலேசிய சோசலிசக் கட்சியை ஆதரித்ததற்காகவும் 2016 மே தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டதற்காகவும் நாட்டின் தேசிய வங்கியான பேங்க் நெகாரா மலேசியாவின் நிருவாகம் பணியில் இருந்து நீக்கியது.

இதை எதிர்த்து, கோகிலா வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த வழக்கு, இன்று ஜூலை 03 திங்கட்கிழமை 2:30 மணி அளவில் கோலாலம்பூர் உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. தொடர்ந்து நான்கு நாட்களுக்கு நடைபெறும் இந்த வழக்கில் மனித உரிமை ஆர்வலரும் ‘பெர்சே’ இயக்க முன்னோடியும் மலேசிய வழக்கறிஞர் மன்ற முன்னாள் தலைவருமான டத்தோ அம்பிகா முன்னிலையாகிறார்.

கோகுல் ராதாகிருஷ்ணன், Sarah Ho Yixin, கே.எஸ். பவாணி ஆகிய வழக்கறிஞர்களும் அம்பிகாவுடன் இணைந்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles