
🔊To listen to this news in Tamil, Please select the text.
மானுக்காக அனுதாபப்படும் புலியை எங்காவாது காண முடியுமா? அப்படிப்பட்ட புலி வேடத்தை ஏற்றுள்ள டத்தோஸ்ரீ முகமட் சனூசி நோர், மசீச, மஇகா கட்சிகள் நியாயமாக நடத்தப்படவில்லை என்று அனுதாபம் தெரிவித்திருக்கிறார்.
சட்டமன்றத் தேர்தலில் போட்டி இடுவதில்லை என்று முடிவெடுத்துள்ள இந்த இரு கட்சிகளும் தேசிய முன்னணியைவிட்டு விலகி, பெரிக்காத்தான் கூட்டணியில் இணைந்தால், ஆறு மாநிலங்களிலும் போட்டி இடுவதற்கு இந்தக் கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று பெரிக்காத்தான் கூட்டணி தேர்தல் பிரிவு இயக்குநருமான சனூசி நோர் வலைவிரித்துள்ளார்.
இது, பெரிக்காத்தான் கூட்டணியின் பலவீனத்தை, குறிப்பாக இவர் மந்திரி பெசாராக இருக்கும் கெடா மாநிலத்தில் மருட்டலை எதிர்நோக்கி இருப்பதால்தான், மலாய் வாக்காளர்கள் குறைவாக இருக்கும் அல்லது கலப்புத் தொகுதிகளைத் தருவாகக் கூறி மசீச, மஇகா கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
