25.3 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

பத்துமலையில் தம்பதிமீது எரிதிராவக வீச்சு:நள்ளிரவில் பெண் அட்டூழியம்

🔥 Views : 5
👁 Reading Now : 61

🔊To listen to this news in Tamil, Please select the text.

பத்துமலையில் உள்ள ஓர் அடுக்ககக் குடியிருப்பில் உள்ள பாரந்தூக்கியின் முகப்பிடத்திற்கு வந்த கணவன்-மனைவிமீது, அங்கு ஏற்கெனவே தயார் நிலையில் இருந்த ஒரு பெண் கடந்த செவ்வாய்க் கிழமை நள்ளிரவு ஒன்றரை மணி அளவில் எரி திராவகத்தை வீசித் தெளித்துவிட்டு தலைமறைவான சம்பவம் கோம்பாக் மாவட்ட போலீசாரை மட்டுமல்ல: சம்பந்தப்பட்ட குடியிருப்புவாசிகளையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

பாதிக்கப்பட்ட 60 வயது உள்நாட்டு மனைவியும் 37 வயது வெளிநாட்டு கணவனும் செலாயாங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களின் 14 வயது மகன் நல்வாய்ப்பாக இத்தாக்குதலில் இருந்து தப்பியுள்ளார்.

இதன் தொடர்பில் குற்றவியல் சட்டம் 324-இன்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைமையக இடைக்காலத் தலைவர் Noor Ariffin Nasir தெரிவித்துள்ளார். இதன் தொடர்பில் பொதுமக்களின் உதவியையும் அவர் நாடியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles