
🔊To listen to this news in Tamil, Please select the text.
முல்லைத்தீவில் சிங்கள ராணுவக் கட்டுப்பாட்டில் இருந்தப் பகுதியில் எப்படி மனித புதைகுழி ஏற்பட்டிருக்க முடியும் என்ற வினாவுடன் நேற்று முல்லைத் தீவு நீதிபதி முன்னிலையில் மேலும் அகழாய்வு செய்தபோது விடுதலைப் புலிகளின் சீருடைகள், பெண்களின் உள்ளாடைகள், மனித எலும்புகள் யாவும் கண்டுபிடிக்கப்பட்டன.
முல்லைத் தீவு – கொக்குத் தொடுவாய்ப் பகுதியில் குடிநீர்க் குழாய்ப் பொருத்துவதற்காக ஜூலை 3-ஆம் நாள் குழிதோண்டியபொழுது மனித எச்சங்கள் காணப்பட்டதை அடுத்து அப்பணி அத்துடன் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், நேற்று ஜூன் 6, வியாழக்கிழமை பாதுகாப்பு பிரிவினர், இரசாயன ஆய்வுத் துறையினர், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், நில அளவை அதிகாரிகள், தொல்பொருள் துறை அதிகாரிகள், நீர் வழங்கல் துறை அதிகாரிகள், தகவல்-தொலைபேசித் துறையினர், மின்சாரத் துறை ஊழியர்கள் ஆகிய தரப்பினர் முன்னிலையில் சம்பந்தப்பட்ட குழியில் மேலும் தோண்டியபோது அதிகமான உடல்கள் அங்கு கமுக்கமாக மறைக்கப்பட்டது அம்பலத்திற்கு வந்துள்ளது.
இருந்தபோதும், இன்னும் சில நாட்களில் இந்த தகவல் யாவும் மெல்லமெல்ல மறைக்கப்பட்டுவிடும். இறுதிப் போரின்போது சிங்கள ராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப் புலிகள் சிங்கள் ராணுவத்தால் கொல்லப்பட்டு மறைக்கப்பட்ட இடங்களில் இதுவும் ஒன்றாக இருக்கக்கூடும்.
