25.3 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

சட்டமன்றங்களில் அடையாளத்தை இழந்து வரும் மசீச, மஇகா கட்சிகள்16-ஆவது பொதுத் தேர்தல்மீது கவனம்

🔥 Views : 3
👁 Reading Now : 65

🔊To listen to this news in Tamil, Please select the text.

நாட்டின் பொருளாதர வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றி வரும் சிலாங்கூர், பினாங்கு மாநில சட்டமன்றங்களில் மஇகாவும் மசீச-வும் கடந்த 15 ஆண்டுகளாக இடம்பெறாமல் இருப்பது, இவ்விரு கட்சிகளுக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி வருகின்றது.

அடுத்த மாதம் 6 மாநிலங்களுக்கு நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் 250-க்கும் மேற்பட்ட தொகுகள் சம்பந்தப்பட்டுள்ளன. இவற்றில், ஒரேயொரு தொகுதி மட்டும் மஇகா சம்பந்தப்பட்டது.

இந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று மசீச, மஇகா கட்சிகள் எடுத்துள்ள முடிவு, இவ்விரு கட்சிகளைப் பொருத்தவரை ஒரு நல்ல முடிவாக பார்க்கப்பட்டாலும் வெற்றி வாய்ப்புள்ள ஜெரம் பாடாங் தொகுதியை மஇகா இழப்பது, நிரந்தர இழப்பாக மாறக்கூடும்.

இருந்தாலும், இந்த இரு கட்சிகளும் அடுத்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலை கருத்தில் கொண்டு, இப்பொழுதே களம் இறங்கி உள்ளதாகத் தெரிகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles