32.9 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

நஜீப் ஆதரவாளர்கள் ஒற்றுமைக் கூட்டணியை ஆதரிக்க வேண்டும்:-துணைப் பிரதமர் ஜாஹிட் ஹமிடி

🔊To listen to this news in Tamil, Please select the text.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக்கின் ஆதரவாளர்கள் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆறு மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி-நம்பிக்கைக் கூட்டணி இணைந்த ஒற்றுமைக் கூட்டணிக்கு வாக்களிக்குமாறு துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி வலியுறுத்தியுள்ளார்.

நஜிப்பின் ஆதரவாளர்கள் நீதிமன்ற விவகாரத்தையும் மாநிலத் தேர்தலையும் இணைத்துப் பார்க்ககூடாது. மேலும், தற்போது நாட்டை ஆளும் ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கப்பட வேண்டும் என்று நஜீப்பும் தெரிவித்துள்ளார்.

நஜிப்பை விடுவிக்க ஒற்றுமை அரசாங்கம் சரியான முடிவை எடுக்கவில்லை யென்றால் நஜிப்பின் ஆதரவாளர்கள் மாநிலத் தேர்தலைப் புறக்கணிக்கக் கூடும் என்பது குறித்துக் கேட்டபோது துணைப் பிரதமர் இவ்வாறு கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles