29.1 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

போலீஸ் சீருடையில் 7,000 கேமராக்கள்:

🔥 Views : 5
👁 Reading Now : 41

🔊To listen to this news in Tamil, Please select the text.

போலீஸ் படையின் ரோந்து பிரிவு, பல்நோக்கு வாகனங்கள் மற்றும் சமூகக் குற்றங்களைக் கண்டறிவதற்கு ஏதுவாகவும் குறிப்பாக போக்குவரத்து பிரிவுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பதற்காகவும் போலீஸ் சீருடையில் பொருத்தக்கூடிய 7,000 கேமராக்கள் கொள்முதல் செய்யப்பட இருப்பதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் தளவாட, தொழில்நுட்பப் பிரிவு இயக்குநர் Aman Sahabudin Abd Manan தெரிவித்துள்ளார்.

நாட்டில் குற்றச்செயலை எதிர்த்துப் போராடும் காவல் படையின் ஆற்றலை அதிகரிப்பதற்காக வரும் ஆண்டில் 7,000 கேமராக்கள் பெறப்படும் என காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன் தொடர்பில் 129 நிறுவனங்கள் தங்களின் ஒப்பந்தப்புள்ளியை சமர்ப்பித்துள்ள நிலையில் அவற்றை மதிப்பீடு செய்த பின்னர் உள்துறையும் போலீஸ் படையும் இணைந்து உரிய நிறுவனத்தைத் தெரிவுசெய்து, அவற்றின்மூலம் கொள்முதல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், Aman Sahabudin Abd Manan இதன் தொடர்பில் மேலும் விளக்கம் அளித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles