
🔊To listen to this news in Tamil, Please select the text.
பிரபல தொழிலதிபரும் சினிமா பட விநியோகிஸ்தருமான மாலிக் ஸ்டிரிம் நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ அப்துல் மாலிக், தனது பிறந்தநாளை முன்னிட்டு 5000 இலவச பிரியாணி பொட்டலங்களை வழங்குகிறார்.
இதுகுறித்த அறிவிப்பு மாலிக் ஸ்டிரிம் மற்றும் அவருடைய இன்ஸ்தாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
நேற்று அவர் தனது 41வது பிறந்தநாளை கொண்டாடிய வேளை, ஆகஸ்டு 18ஆம் தேதி வரையில் இந்த பிரியாணி உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படவுள்ளதாகவும், அதனைப் பெற்றுக் கொள்ள கிள்ளான் வட்டாரத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லம், முதியோர் இல்லம், அரசு சாரா இயக்கங்கள் போன்றவற்றை தங்களைத் தொடர்புக் கொள்ளும்படியும் அந்த பதிவில் கூறப்பட்டிருந்தது.
5000 தான் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், இணையம் வழி விண்ணப்பிக்கப்பட்ட கோரிக்கை 6000தை தாண்யிருப்பதால், அவர்களுக்கும் உணவு பொட்டலங்கள் வழங்கப்படவிருப்பதாகவும் அவரது அலுவலகத்தின் வணிக வியூக அதிகாரி அலேக்ஸ் கூறியுள்ளார்.
