29 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

போதைப் பொருள் தயாரிப்பு கூடம் முறியடிப்பு மூவர் கைது

🔥 Views : 8
👁 Reading Now : 38

🔊To listen to this news in Tamil, Please select the text.

பினாங்கில் ஹரோய்ன் போதைப் பொருள் தயாரிப்பு கூடம் முறியடிக்கப்பட்டதோடு உள்நாட்டைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டனர். சிம்பாங் அம்பாட், தென் செபெராங் பிறை மற்றும் மத்திய செபெராங் பிறை யில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் மூலம் இரண்டு சகோதரர்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டதாக பினாங்கு போலீஸ் தலைவர் டத்தோ Khaw Kok chin தெரிவித்தார். சிம்பாங் அம்பாட்டிலுள்ள ஒரு வீட்டில் போதைப் பொருள் தயாரிப்பு கூடம் செயல்பட்டுள்ளதை அறிந்து அந்த வீட்டில் இருந்த மற்றொரு சந்தேகப் பேர்வழி கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார். அதோடு போலீஸ் மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் 184,800 மதிப்புள்ள 13.5 கிலோகிரேம் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் Khaw Kok Chin கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles