
🔊To listen to this news in Tamil, Please select the text.
நேற்று சிட்னியிலிருந்து கோலாலம்பூருக்குத் திரும்பிக் கொண்டிருந்த விமானத்தில் வெடி குண்டு மிரட்டல் விடுத்த பயணியை ஆஸ்திரேலிய போலீஸார் கைது செய்துள்ளனர்.
அவரது தோள் பையைச் சோதனை இட்டதில் அதில் வெடிகுண்டு எதுவும் கைப்பற்றப்படவில்லை.
45 வயதான அந்த நபர் வெடிகுண்டை வெடித்து, விமானத்தைத் தகர்க்கப் போவதாக மிரட்டியதை அடுத்து, விமானம் சிட்னிக்கு திருப்பி விடப்பட்டது.
இந்நிலையில், விமானப் பணியாளார்களின் உத்தரவைப் பின்பற்றாதது, பயணிகளை அச்சுறுத்தியது சம்பந்தமாகக் அந்தப் பயணி மீது குற்றம் சாட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்த நபருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும் 15 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர் அபராதமும் விதிக்கப்- படலாம்.



