32.9 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

இறக்குமதி செய்யப்பட்ட அரிசிகளை மட்டும் வாங்க அரசு நிறுவனங்களுக்கு 400 மில்லியன் ரிங்கிட் உதவித் தொகை: பிரதமர்

🔊To listen to this news in Tamil, Please select the text.

அரசு நிறுவனங்கள் இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை மட்டும் வாங்க கிட்டத்தட்ட 400 மில்லியன் ரிங்கிட் தொகையை மானியமாக வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இதனை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையின் வாயிலாக சந்தையில் உள்ளூர் வெள்ளை அரிசி விநியோகத்தை சுமார் 5% அதிகரிக்கும்.

இது ராணுவ முகாம்கள், போலீஸ், பள்ளி விடுதிகள் போன்ற அரசாங்க நிறுவனங்களால்   பயன்படுத்தப்பட்ட தொகையாகும்.

இறக்குமதி அரிசியின் விலை உயர்ந்துள்ளதால் உள்ளூர் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

சில ஹோட்டல்கள் ஏற்கெனவே உள்ளூர் அரிசியைப் பயன்படுத்துகின்றன.

இதன் அடிப்படையில் அரசு நிறுவனங்கள் இறக்குமதி அரிசை வாங்குவதற்காக நிதி ஒதுக்கப்படுகிறது.

இது இலவசம் அல்ல. 400 மில்லியன் ரிங்கிட் உதவித் தொகை ஒதுக்கப்படுகிறது.

பெலாங்காய் செமோமோய் பெல்டா விழாவிற்கு தலைமையேற்று உரையாற்றிய பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles