26.4 C
Kuala Lumpur
Thursday, July 2, 2026

Vetri

பினாங்கு மறைமாவட்டத்தின் கத்தோலிக்க ஆயர் செபஸ்தியன் பிரான்சிஸ் கர்த்தினலாக நியமனம்

🔥 Views : 9
👁 Reading Now : 40

🔊To listen to this news in Tamil, Please select the text.

பினாங்கு மறைமாவட்டத்தின் கத்தோலிக்க ஆயர்,
டத்தோ ஶ்ரீ செபஸ்தியன் பிரான்சிஸ் அவர்கள் அண்மையில் வத்திக்கான் புனித பேதுரு சதுக்கத்தில் கர்தினலாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் நியமிக்கப்பட்டார். உலகம் முழுவதிலுமிருந்து கர்தினலாகத் தேர்வுப் பெற்ற 21 கர்தினல்களில் இவரும் ஒருவர். மலேசியாவின் இரண்டாவது கர்தினால் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 21 கர்தினால்களில் 18 பேர் 80 வயதுக்கு உட்பட்டவர்கள். எனவே, அடுத்த போப்பாண்டவரை தேர்ந்தெடுப்பதில் கர்தினால் செபஸ்தியன் அவர்களும் அவரது ஒட்டுரிமையைக் கொண்டிருக்கிறார்.

திருத்தந்தையின் இறப்பாலோ பணித்துறப்பாலோ அவருடைய பணியிடம் வெறுமையாகும் வேளையில் சட்ட விதிமுறைக்கேற்ப புதியதொரு திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு 80 வயதுக்கு உட்பட்ட கர்தினால்களின் மிக முக்கிய பணி ஆகும்.கர்தினால் குழுவின் கூட்டங்களில் கலந்துகொள்வதும், திருத்தந்தை வேண்டும்போது அவருக்கு தனியாகவோ, குழுவாகக் கூடியோ ஆலோசனை வழங்குவதும் கர்தினால்களின் பணிகளுள் அடங்கும். மேலும், கர்தினால்கள் அதிமுக்கிய ஆய்வுக்குரிய பொருள்களைப் பற்றி விவாதித்திட அழைக்கப்படும்போது திருத்தந்தைக்குக் குழுவாக உதவி புரிகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles