
🔊To listen to this news in Tamil, Please select the text.
-நக்கீரன்
பத்துமலை, அக்.02:
அருள்மிகு பத்துமலைத் திருத்தலத்திற்கு கோடம்பாக்க நாயகி நயன்தாரா, தன் கணவர் இரு பிள்ளைகளுடன் வருகை தந்துள்ளார்.
மலேசியாவிற்கு எத்தனையோ முறை தொழில் முறையில் படப்பிடிப்பிற்காக வந்தாலும் அருள்மிகு திருமுருகனை வழிபடுவதற்காக இம்முறை மலேசியாவிற்கு வந்துள்ளதாக திருமதி நயன்தாரா தெரிவித்தார்.

விக்னேஸ் சிவன்-நயன்தாரா இணையர், இவர்களின் இரு பிள்ளைகள் மற்றும் குழுவினரை கோலாலம்பூர் அருள்மிகு மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா பத்துமலை ஆலய வளாகத்தில் வரவேற்றார்.
ஆலயப் பணியாளார் விஜி உள்ளிட்ட ஊழியர்களும் உடன் இருந்தனர்.
ஆர். நடராஜாவை சந்தித்தபின், நயன்தாரா குடும்பத்தினர், உடன் வந்தவர்கள் உள்ளிட்ட அனைவரும் உச்சிமலை கந்தவேலை வழிபட படியேறிச் சென்றனர்.
