25.3 C
Kuala Lumpur
Tuesday, April 21, 2026

Vetri

எங்கே அம்பாங் ஜெயா இந்து மயானம்?

அம்பாங் இந்திய சமூக தலைவர்களும் மண்ணின் மைந்தர்களும் அம்பாங் இந்து மயானத்தை இன்று பார்வையிட்டனர்.
அரசாங்கம் வழங்கிய இந்த மயான நிலத்தில் இப்பொழுது ஓரளவு மட்டுமே நிலம் இருக்கிறது.
பாதிக்கும் மேற்பட்ட நிலம் காணாமல் போய்விட்ட அதிர்ச்சியில் அம்பாங் வட்டார மக்கள் உறைந்துள்ளனர்.
கடந்த 1962 ஆம் ஆண்டு 3.825 ஏக்கர் நிலப்பரப்பில் அரசாங்கத்தால் அம்பாங் இந்து மயானத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலம் இப்போது 1.5 ஏக்கர் நிலம் மட்டுமே இருக்கிறது.


மீதமுள்ள நிலம் காணாமல் போய்விட்டது என்ற செய்தி காட்டு தீ போல் அம்பாங் வட்டார மக்களிடையே பரவியுள்ளது.

இந்து மயானத்திற்கு ஒதுக்கப்பட்ட பாதி நிலம் எங்கே போனது என்ற கேள்விகள் முன் வைக்கப்படுகிறது.
இன்று அம்பாங் இந்து மயானத்தை பார்வையிட்ட இந்தியத் தலைவர்களும் மண்ணின் மைந்தர்களும் ஒரு நடவடிக்கை குழு ஒன்றை அமைத்துள்ளனர்.
அம்பாங் ஜெயா மயானத்திற்கு ஒதுக்கப்பட்ட பாதி நிலம் எங்கே போனது. இதற்கு காரணமான காரணகர்த்தா யார் என்ற கேள்வியை இவர்கள் முன் வைத்துள்ளனர்.
காணாமல் போன பாதி நிலம் மீண்டும் மீட்கும் முயற்சியில் இக்குழு ஈடுபட்டிருக்கிறது. சம்பந்தப்பட்டவர்கள் இந்த விவகாரத்தில் விரிவான விளக்கங்களை அளிக்க முன்வருவார்களா என்ற கேள்வியையும் இவர்கள் முன் வைத்துள்ளனர்.
இதனிடையே அம்பாங் ஜெயா நகராண்மைக் கழக உறுப்பினர்களாக இருக்கும் மோகன்ராஜ், தனபால், ரகுநாதன் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோர் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டுமென வட்டார மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மக்களிடம் கிடைக்கப்பெற்ற புகாரை தொடர்ந்து நான்கு கவுன்சிலர்களும் மயானத்தை பார்வையிட்டனர் இது தொடர்பில் மாவட்ட நில இலாகாவிடம் விபரங்கள் சேகரிக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles