
கிள்ளான் தாமான் உத்தாமாவில் சிலாங்கூர் சிறுவர்கள் சமூக நல இல்லத்தில் இப்போது 45 சிறுவர்கள் தங்கியுள்ளனர்.
நோய்த்தொற்று தாக்கத்தினால் இந்த இல்லம் பொருளாதார நெருக்கடி எதிர்நோக்கி இருப்பதாக அதன் பராமரிப்பாளர் உஷா அம்மா தெரிவித்தார்.
நல்லுள்ளம் கொண்ட பொதுமக்கள் இந்த 45 பிள்ளைகளின் பசியை போக்க உதவி புரியும் படி அன்போடு கேட்டுக் கொண்டார்.
ஏஎஸ்டி செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியை தொடர்ந்து பண்டார் பாரு கிள்ளான் கிராமத் தலைவர் அருள்நேசன் மற்றும் கவுன்சிலர் டாக்டர் குவா ஆகியோர் அந்த இல்லத்திற்கு பொருட்களை வழங்கி உதவி புரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இல்லத்தில் உள்ள பிள்ளைகளுக்கு தேவையான உணவுப் பொருட்கள், காய்கறிகள்,கோழி மீன் வகைகள் தேவைப்படுவதால் மற்றவர்களும் உதவி புரியலாம் என்று அருள்நேசன் கேட்டுக்கொண்டார். தொடர்புக்கு உஷா அம்மா 014 323 77 45.
