33.5 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

நான் வேறு மாநிலம் செல்லக்கூடாதா! அதை கூற இவர்கள் யார்? டாக்டர் ராமசாமி பதிலடி

🔥 Views : 9
👁 Reading Now : 63

நாட்டில் எந்த மாநிலத்திலும் கோயில்கள் உடைபட்டாலும் துணிந்து குரல் கொடுப்பேன். ஒருபோதும் பின்வாங்க மாட்டேன் என்று பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி சூளுரைத்தார்.
நான் பினாங்கு மாநிலத்தை விட்டு வேறு மாநிலம் செல்லக்கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை.
நான் ஒரு மலேசியப் பிரஜை. மேலும் ஜசெக கட்சியில் தேசிய துணைச் செயலாளர்.
அந்த வகையில் நாட்டில் எந்த இடத்தில் கோயில்கள் உடை பட்டாலும் அதை தட்டி கேட்க செல்வேன்.
நான் பினாங்கில் தான் இருக்க வேண்டும். பிற மாநிலத்திற்கு செல்லக் கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை.
கெடா மாநிலத்தில் கோயில்கள் உடைக்கப்பட்ட போது அதை எதிர்த்து போராடினேன். கோலாலம்பூரில் ஒரு தோட்ட வீடுகள் உடைக்கப்பட்ட போதும் அதை எதிர்த்து போராடினேன். ஜொகூரில் ஒரு கோயில் உடை பட்டபோதும் அதை எதிர்த்துப் போராடி இருக்கிறேன்.
நான் சிறு வயது முதல் இது நாள் வரை நாட்டில் பல போராட்டங்களில் பங்கேற்று இருக்கிறேன். இது தவிர்த்து அனைத்துலக அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருக்கிறேன். சுமார் 50 ஆண்டுக்கு மேலாக பொது வாழ்க்கையில் இருக்கிறேன்.
ஆகவே நான் வேறு மாநிலங்களுக்கு செல்லக்கூடாது என்று சொல்வதற்கு எவருக்கும் தகுதி இல்லை என்று அவர் சாடினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles