
சீனாவில் தயாரிக்கப்பட்ட மற்றொரு கோவிட் -19 தடுப்பூசியைப் பரிசோதிப்பதற்கான இடமாக, மலேசியா தேர்வு செய்யப்பட்டுள்ளது, இந்த முறை ஷென்சென் காங்தாய் உயிரியல் தயாரிப்புகள் கூட்டுறவு நிறுவனம் இந்த தடுப்பூசியை தயாரித்துள்ளது.
சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, மூன்றாம் கட்ட மருத்துவ ஆய்வுக்குத் தேசிய மருந்து ஒழுங்குமுறை பிரிவு (என்.பி.ஆர்.ஏ.) மே 28-ம் தேதி ஒப்புதல் அளித்தது என்றார்.
“இந்த மருத்துவ ஆய்வில், சீனாவின் ஷென்சென் காங்தாய் உயிரியல் தயாரிப்புகள் நிறுவனம், தயாரித்த சார்ஸ்-சிஒவி-2 (SARS-CoV-2) தடுப்பூசி (வெரோ செல்கள்), செயலிழப்பு, 5μg / 0.5mL தயாரிப்புகள் ஈடுபடுத்தப்படும்.
“இந்த 3-ஆம் கட்ட மருத்துவ ஆய்வு, மலேசியாவில் உள்ள எட்டு ஆராய்ச்சி மையங்களில் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுகொண்ட 3,000 பங்கேற்பாளர்களைக் கொண்டு நடத்தப்படும், இதற்கு 15 முதல் 19 மாதங்கள் வரை ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
