26.6 C
Kuala Lumpur
Wednesday, September 30, 2026

Vetri

காராக் மக்களுக்கு சிங்காரம், நாகூர் பாய் மனிதநேயம்

🔥 Views : 33
👁 Reading Now : 34

நோய்த்தொற்று தாக்கத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் காராக் வட்டாரத்தைச் சேர்ந்த மக்களுக்கு உதவும் வகையில் சிங்காரம் மற்றும் நாகூர் பாய் உணவு பொருட்களை வழங்கி பேருதவி புரிந்துள்ளனர்.
அண்மையில் சிங்காரம் தனது மனைவியை இழந்து இருந்தாலும் இந்த இக்கட்டான காலகட்டத்தில் மக்களுக்கு உதவும் வகையில் 300 மீகூன் பொட்டலம் வழங்கியிருக்கிறார். அதேபோல் கோலாலம்பூரைச் சேர்ந்த நாகூர் பாய் தனது சார்பில் 50 அரிசி பொட்டலம் வழங்கினார்.
நல்லுள்ளம் கொண்ட மக்கள் வழங்கும் இந்த உணவு பொட்டலங்கள் ஏழைகளுக்கு வழங்கப்படும் என்று சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles