26.4 C
Kuala Lumpur
Saturday, April 25, 2026

Vetri

எப்போது எங்களுக்கு வேலை கிடைக்கும்? 10 வருடமாக காத்திருக்கும் 100க்கும் மேற்பட்ட கல்வித்துறையில் பட்டதாரிகள்

🔊To listen to this news in Tamil, Please select the text.

நாட்டிலுள்ள பொது மற்றும் தனியார் உயர்க்கல்விக் கழகங்களில் கல்வியல் துறையில் பட்டம் பெற்றும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியர் துறையில் வேலை வாய்ப்பு இன்றி தவிக்கும் 100க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என கல்விஅமைச்சில் நேற்று மகஜர் சமர்ப்பித்தனர்.

கல்வித்துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் கல்வி அமைச்சின் கீழ் ஆசிரியர் பணிக்காக பல முறை மனுச் செய்தும் அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்த நிலையில்தான் மலேசிய இந்திய கல்வி உருமாற்ற சங்கமான MIETA தலைவர் இளங்கோவன் அண்ணாமலை, மகஜர் வழங்கும் குழுவின் தலைவரான லட்சப் பிரபு ராஜகோபால் , தேசிய வவாசான் இந்தியர்கள் அமைப்பின் தலைவர் டாக்டர் மதியழகன் நாராயணசாமி ஆகியோரின் ஏற்பாட்டில் நேற்று கல்வி அமைச்சரின் அரசியல் செயலாளரிடம் மகஜர் சமர்ப்பிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைப்பதற்காக இந்த மகஜர் வழங்கியிருக்கிறோம் என இளங்கோவன் கூறினார்.

கல்வித்துறையில் பட்டம் பெற்று 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் பலர் ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பு இல்லாமல் இருப்பது வேதனைக்குரிய ஒன்று என கல்வி அமைச்சிடம் மகஜர் வழங்கும் குழுவின் தலைவரான லட்சப் பிரபு ராஜகோபால் தெரிவித்தார்.

இது ஒரு வாழ்வாதார பிரச்சனை. ஆண்டுதோறும் ஆசிரியர் துறை பயிற்சிக்குப் பலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு அவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவது வரவேற்கப்பட்டாலும் அரசாங்க மற்றும் பொது பல்கலைக்கழகங்களில் கல்வி துறையில் பட்டம் பெற்றவர்களைக் கல்வி அமைச்சு புறக்கணிப்பது எந்த வகையில் நியாயம் என வவாசான் இந்தியர்கள் நேசனல் அரசு சார்பற்ற இயக்கத்தின் தேசிய தலைவரான டாக்டர் மதியழகன் நாராயணசாமி வினவினார்.

இதனிடையே கடந்த 10 ஆண்டு காலமாக பல முறை ஆசிரியர் வேலைக்காக மனு செய்தும் ஆசிரியராக பணியாற்றுவற்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள் தங்களின் கசப்பான அனுபவங்களை வணக்கம் மலேசியாவுடன் பகிர்ந்து கொண்டனர்.

நாடு தழுவிய நிலைவிய நிலையில் எங்களிடம் பதிவு செய்து கொண்டுள்ள 160 பேர் மட்டுமின்றி இந்த பிரச்னையை எதிர்நோக்கும் மேலும் பலருக்கும் கல்வி அமைச்சு வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் என டாக்டர் மதியழகன் கோரிக்கை விடுத்துள்ளார். அரசு சார்பற்ற இயக்கத்தின் தலைவர் என்ற முறையில் தம்மால் என்ன செய்ய முடியுமோ அதை செய்து வருகிறேன். ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம்தான் உதவ முன்வரவேண்டுமென மதியழகன் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles