29 C
Kuala Lumpur
Wednesday, July 1, 2026

Vetri

வறிய நிலை மற்றும் வழித் தெரியாத மக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள பட்ஜெட் – செனட்டர் நெல்சன்.

🔥 Views : 8
👁 Reading Now : 63

🔊To listen to this news in Tamil, Please select the text.

இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் மிகக்குறைந்த வருமானம் கொண்ட தரப்பினர், கடைநிலை மக்கள் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வழி தெரியாமல் நிற்கும் மக்களின் தேவைக்கும் நலனுக்கும் முக்கியத்துவம் கொடுத்து அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார் ம.இ.கா-வின் கல்விக் குழுத் தலைவர் செனட்டர் டத்தோ நெல்சன்.

இதை வரவேற்பதாக கூறிய அவர், இதில் அறிவிக்கப்பட்ட அனைத்து ஒதுக்கீடுகளும் நலத்திட்டங்களும் பரவலாக எல்லா நிலை மக்களிடமும் சென்று சேர்வதை உறுதி செய்வது அவசியம் என்றார்.

தமிழ்ப்பள்ளிகளுக்கான ஒதுக்கீடு உட்பட ஒட்டுமொத்தமாக அனைத்து பள்ளிகளின் சீரமைப்புக்காக 1.9 பில்லியன் ஒதுக்கப்பட்டிருப்பது மாணவர்களின் கல்வித் தரத்தையும் போதனா சூழலையும் மேம்படுத்த துணைப்புரியும் என நெல்சன் சுட்டிக் காட்டினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles