
🔊To listen to this news in Tamil, Please select the text.
செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு டாக்டர் குணராஜ் அவர்களின் ஏற்பாட்டில் வருகின்ற தீபாவளியை முன்னிட்டு மக்களுக்கான தீபாவளி ஷாப்பிங் வவுச்சர் வழங்கும் நடவடிக்கை செந்தோசா சட்டமன்ற அலுவலகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதிகளவான மக்கள் தினமும் செந்தோசா அலுவலகத்திற்கு வருகை தந்து ஷாப்பிங் வவுச்சருக்கு விண்ணப்பம் செய்துள்ளனர். இதுவரை 900-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களது விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதி உடையவர்களுக்கு ஷாப்பிங் வவுச்சர் வழங்கப்படும். குறிப்பாக பி 40 மற்றும் OKU அவர்களுக்கான வவுச்சர்கள் 600 மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே செந்தோசா மக்கள் அனைவரும் திரண்டு வந்து வவுச்சருக்கு விண்ணப்பிக்குமாறு செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு டாக்டர் குணராஜ் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.
