
🔊To listen to this news in Tamil, Please select the text.
கோலாலம்பூர், டிச.19:
நிர்வாக மட்டத்தில் எழுந்த பிரச்சினையை சுமூகமான முறையில் பேசித் தீர்க்காததுடன் தன் பலவீனத்தையும் தவறையும் மறைப்பதற்காக பொதுமக்களுக்கு உரிய ஒரு வழிபாட்டுத் தலம் என்றும் பாராமல் அதைப்பூட்டி வைத்ததற்காக கோலாலம்பூர், ஸ்தாப்பாக், தாமான் டானாவ் கோத்தாவில் உள்ள அருள்மிகு திருமுருகன் ஆலயத் தலைவர் இராமச்சந்திரன் த/பெ மணியம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இதே ஆலயத்தின் முன்னாள் பொருளாளர் கெவின் இரமேஷ் த/பெ இராஜகுமார் அணியினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
2016 முதல் ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து ஆண்டுக் கூட்டத்தை நடத்தாமல் இருந்ததுடன் இதைத் தட்டிக் கேட்டதற்காக, ஆயுட்கால உறுப்பினர்களான தங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, புதிய உறுப்பினர்களை சேர்த்துக் கொண்டு தனிக் கூட்டத்தை நடத்தி ஆலய நிருவாகத்தில் பிரிவினைப் போக்கை ஏற்படுத்தியவர் இராமச்சந்திரன்.
இதுகுறித்து பேசி நல்ல முறையில் தீர்வு காண விரும்பிய தங்கள் தரப்பு, பொதுமக்களின் வழிபாட்டு முறைக்கு எந்தப் பிரச்சினையும் வரக்கூடாது என்பதில் கவனாக இருந்தது.
ஆனால், தலைவராக இருகும் இராமச்சந்திரன் எந்த சமரசத்திற்கு வராததால், நாங்கள் சங்கப் பதிவக அதிகாரியிடம் நிலைமையை எடுத்துச் சொல்லி அவரச நிருவாகக் கூட்டத்திற்கு சட்டப்படி ஏற்பாடு செய்தோம்.
இதை எதிர்கொள்ள துணிவில்லாததாலும் தங்கள் பக்கம் உள்ள பலவீனத்தை உணர்ந்ததாலும் டிசம்பர் 14, 15 ஆகிய இரு நாட்களுக்கு ஆலயத்தைப் பூட்டி வைத்தார் இராமச் சந்திரன்.
ஆலய வளாகத்திற்கு அவசர ஆண்டுக் கூட்டத்தை ஏற்பாடு செய்த தங்கள் தரப்பு, ஆலயம் பூட்டப்பட்டதால் வேறு இடத்தில் கூட்டத்தை நடத்தில் அங்கு எடுக்கப்பட்ட முடிவை நேற்று பிற்பகலில் சங்கங்களின் பதிவதிகாரியிடம் சமர்ப்பிக்க இருப்பதாக இதன் தொடர்பில் நடந்த செய்தியாளர்க் கூட்டத்தில் கெவின் அணியினர் தெரிவித்தனர்.

இதற்கிடையில் ஆலயத்தின் ஆபரணங்களை ஆலயத்தின் முன்னாள் பொருளாளர் என்னும் முறையில் இன்னும் தன்வசமே வைத்திருப்பதாக சொன்ன கெவின், முறையான நிருவாகத்தை நடத்தாக இராமச்சந்திரன் தரப்பினரிடம் ஆலய ஆபரணங்களை வழங்கத் தயாராக இல்லை என்றும் வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும் இத்ன தொடர்பில் காவல் புகார் செய்திருப்பதாகவும் கெவின் தரப்பினர் மேலும் தெரிவித்தனர்.
ஆலய நிருவாகம் சீராக நடைபெறாததை சுட்டிக் காட்டவே செய்தியாளர்க் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ததாகவும் இதன் தொடர்பில் இனிமேல் பொதுமக்களிடம் எந்தப் பிரச்சினையும் கொண்டு செல்லவோ அல்லது செய்தியாளர் சந்திப்பை இனியும் நடத்தவோ தங்கள் தரப்பு தயாராக இல்லை என்பதைச் சொன்ன கெவின் தரப்பினர், ஆர்.ஓஎஸ்-சங்கங்களின் பதிவு அதிகாரி என்ன முடிவு சொன்னாலும் அதை ஏற்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
தங்களைப் பொறுத்த அளவில் ஆலய நிருவாகவும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும்; சொந்தப் பிரச்சினைக்காக ஆலயத்திப் பூட்டி பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்திய தலைவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதுதான் என்று கெவின் தரப்பினர் மேலும் தெரிவித்தனர்.
