29.7 C
Kuala Lumpur
Tuesday, April 21, 2026

Vetri

சிலாங்கூர் பூச்சோங்கில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இருப்பு தகடுகளை பதிக்கும் 50 விழுக்காடு பணி முடிந்துள்ளது!

🔊To listen to this news in Tamil, Please select the text.

சிலாங்கூர், பூச்சோங் தாமான் வவாசனில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியிலுள்ள கால்வாய்க்கு அருகே இரும்பு தகடுகளை பூமியில் பதிக்கும் இரண்டாவது கட்ட திட்டத்தில் 50 விழுக்காடு பணிகள் முழுமையடைந்துள்ளன.  முதல் கட்ட திட்டத்தில் பதிக்கப்பட்ட 375 இரும்பு தகடுகள் பூமியில் பதிக்கப்பட்டுள்ளதாக செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி A. அன்பழகன் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பகுதியில் தொடர்ந்து மண் நகர்வதை தடுக்கும் நடவடிக்கையாக அங்கு  இரும்பு  தகடுகள் பூமியில் பதிக்கப்படுவதாக அவர்  கூறினார். 

கடந்த சில நாட்களாக அடிக்கடி மழை பெய்தாலும், அந்த பகுதியில் மண் நகர்வு நடைபெறவில்லையென அன்பழகன் தெரிவித்தார். தாமான் வவாசன் பூச்சோங்கில் டிசம்பர்  16ஆம் தேதி  ஏற்பட்ட நிலச்சரிவில்  ஒன்பது வரிசை வீடுகளைச் சேர்ந்த  29 குடியிருப்புவாசிகள்  பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியேற்றப்பட்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles