33.5 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

பாக்குத் தீவின் பாரம்பரிய சின்னமான பெரியை நீரில் மூழ்கடிப்பதா ?

🔥 Views : 9
👁 Reading Now : 47

பினாங்கு மாநிலத்தின் பாரம்பரிய சின்னமாக பல்லாண்டு காலம் திகழ்ந்து வந்த பெரி சேவை நிறுத்தப்பட்டு,இன்று அதன் நிலையை பார்த்து வேதனையடைவதாக பாகான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி கூறினார்.
அந்த பெஃரி சேவை நிறுத்தப்படும் போது,ஒரு
பெஃரியை பாகான் டாலாம் பகுதியில் நிரந்தரமாக வைக்கப்பட்டு,அதனை உணவகமாவோ அல்லது போது நிகழ்வுகளை நடத்தும் இடமாகவோ பயன்படுத்தலாம் என ஆலோசனை வழங்கியிருதேன்.
இன்று எதுவும் நடைபெறாத நிலையில் ஆயிரம் நினைவுகளை கொண்ட அந்த பெஃரி இன்று நீரில் மூழ்கிக் கொண்டிருப்பதை கண்ணால் பார்க்க முடிகிறதேயொழிய என்னால் எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த பெஃரி போக்குவரத்து அமைச்சின் கீழ்,பினாங்கு துறைமுக வாரியம் அதனை நிர்வகித்து வருவதே காரணம் என தெரிவித்த சத்தீஸ் முனியாண்டி,எனது தொகுதியில் இப்படியொரு நிலை ஏற்பட்டுள்ளதை சோகத்துடன் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles