
🔊To listen to this news in Tamil, Please select the text.
டுரியான் தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் கொலை செய்யப்பட்டதன் தொடர்பில் இரண்டு வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர். பஹாங், சாமாங், ஜாலான் அயெர் தெர்ஜுனில் உள்ள டுரியான் தோட்டத்தில் 29 வயதுடைய வெளிநாட்டினர் ஒருவர் கொலைசெய்யப்பட்டதாக பென்தோங் மாவட்ட போலீஸ் தலைவர் சைஹாம் கஹர் தெரிவித்தார். கொலை செய்யப்பட்டவர் மியன்மாரைச் சேர்ந்த தொழிலாளி என்பதோடு கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்து பாராங் மற்றும் கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட அந்த இருவரும் அந்த டுரியான் தோட்டத்தில் வேலை செய்து வந்ததோடு அவர்களும் மியன்மாரைச் சேர்ந்தவர்கள் என சைஹாம் தெரிவித்தார்.