31.3 C
Kuala Lumpur
Saturday, August 1, 2026

Vetri

பூக்கடை வியாபாரத்திற்கு அனுமதி வழங்க வேண்டும்

🔥 Views : 23
👁 Reading Now : 27

கோவிட் – 19 அவசர கால பிரகடனத்தால் மூடப்பட்டிருக்கும் பூக்கடைகளை
திறப்பதற்கு அனுமதிக்க வேண்டுமென பினாங்கு இந்து இயக்கம் உள்நாட்டு
வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சிடம் கோரிக்கையை முன்
வைத்துள்ளது.இந்த பூ வியாபாரத்திற்கு அரசாங்கம் அனுமதி
மறுத்துள்ளதால்,இந்த தொழிலையே நம்பி வாழும் பலர்
சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.தினமும் குடும்பத்தை வழிநடத்துவதற்கு இந்த
வருமானத்தையே இவர்கள் நம்பியுள்ளனர் இயக்கத்தின் தலைவர்
பி.முருகையா கூறினார்.கடந்த ஒரு வாரமாக எந்தவொரு பிழைப்புமின்றி
குடும்பத்தினர்கள் அழுது புலம்புகின்றனர்.பல்வேறு சில்லறை
வியாபாரங்களுக்கு அனுமதி வழங்கியிருக்கும் அரசாங்கம்,இந்தியர்களின்
அடிப்படை தேவைகளில் ஒன்றான பூ விற்பனைக்கு மட்டும் தடை
விதித்திருப்பது ஏனென்று அவர் கேள்வியெழுப்பினார்.ஆகையால் இவர்களின்
துயரை கருத்தில் கொண்டு,பூ வியாபாரத்திற்கு உடனடியாக
அனுமதி வழங்க வேண்டுமென பி.முருகையா அரசாங்கத்தை கேட்டுக்
கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles